முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் அடுத்ததாக மலையாள டாப் நடிகர் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் இதெல்லாம் நடக்காத காரியம் என்கிறார்கள் தல ரசிகர்கள்.
தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வலிமை படம் உருவாகி வருகிறது. இறுதிகட்ட படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டு அனுமதி கிடைக்க படக்குழுவினர் போராடி வருகின்றனர். ஆனால் இன்னும் கிடைத்தபாடில்லை.
இருந்தாலும் சும்மா இருக்க முடியாது என படத்தின் இதர வேலைகளை பரபரப்பாக முடித்து வருகிறார்களாம். அந்த வகையில் இதுவரை படமாக்கப்பட்ட வலிமை படத்தின் காட்சிகளை எடிட் செய்து விட்டார்களாம். மேலும் டப்பிங் கூட முடிந்து விட்டதாம்.
இந்நிலையில் தல 61 படத்தைப் பற்றிய பேச்சுகள் எழும்பிய நிலையில் அதைவிட வேகமாக மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் இயக்கும் புதிய படம் ஒன்றில் அஜித் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
குழந்தைகளுக்காக மோகன்லால் சமீபத்தில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் தல அஜித் கேமியோ ரோலில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள பத்திரிக்கைகள் பரப்பிவிட்டனர். ஆனால் இதை தயாரிப்பு நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது.

இருந்தாலும் தளபதி விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்த மோகன்லால் அஜித்துடன் நடிக்க மாட்டாரா என தல ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். சமீபகாலமாக மோகன்லால் மற்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.