Tamil Cinema News | சினிமா செய்திகள்
அறிவிப்பு வெளியாகி வருஷம் ஆச்சு, ஆனாலும் ஒரு பிரயோஜனமும்மில்லை.. புலம்பும் தல ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டு மாஸ் ஹீரோவாக கெத்தா வலம் வருபவர் தான் தல அஜித்.
தற்போது H. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் தல அஜித்தின் ‘வலிமை’ படத்திற்காக ரசிகர்கள் விழிமேல் விழி வைத்து கொண்டிருக்கின்றனர்.
இதன் காரணமாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த போதும், இன்னும் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில் ரிலீஸ் தேதியை பற்றி எந்த அறிவிப்பும் வெளிவராததால் தல ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் இதைப்பற்றி சமூக வலைதளங்களிலும் தங்களுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனவே, இதை அறிந்து கொண்ட படக்குழு, கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதாக தெரிகிறது.
