Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-shalini-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பயங்கர குண்டாக மாறிய அஜீத் மனைவி ஷாலினி.. லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியில் 90ஸ் ரசிகர்கள்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இளம் கதாநாயகியாக 90 காலகட்டங்களில் வாழ்ந்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சாலினி. இவர் தல அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஷாலினி படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். ஆனால் ஷாலினி நடிப்பில் வெளியான பல படங்கள் இன்றைக்கும் ரசிகர்களின் பேவரைட் படமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தளபதி விஜய்யுடன் ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் பிடித்தமான திரைப்படம். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகியாக ஷாலினி மாறிய முதல் திரைப்படம் காதலுக்கு மரியாதை தான்.

காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதன் பிறகு விஜய்யுடன் சில படங்களில், அஜித்துடன் பல படங்களிலும் ஜோடி போட்டு நடித்துள்ளார். மேலும் பிரசாந்த் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

நடிகையாக பெரிய உயரத்தை தொடுவார் என எதிர்பார்த்த நேரத்தில் திடீரென தல அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். அதன்பிறகு பட விழாக்களில் கூட அவரை அதிகமாக பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு ஷாலினி தனது தங்கை மற்றும் மகன் ஆத்விக் உடன் சென்றுள்ளார். அந்த புகைப்படத்தில் ஷாலினி முன்னரை விட கொஞ்சம் உடல் எடை கூடி விட்டதாக தெரிகிறது.

ajith-wife-shalini-latest-photo-cinemapettai

ajith-wife-shalini-latest-photo-cinemapettai

Continue Reading
To Top