தொழில் பக்தி கொஞ்சம் கூட இல்லாமல் திரியும் அஜித்.. கடைசி வரை பிடிக் கொடுக்காமல் AK படுத்தும் பாடு

Actor Ajith: தான் உண்டு தன் வேலை உண்டுன்னு வாழ்ந்து வரும் நடிகர் அஜித், எப்போதுமே அமைதியாக இருப்பவர். சினிமாவில் இவர் 61 படங்களில் நடித்திருந்தும் மிகவும் குறுகிய நண்பர்கள் வட்டாரத்தில் வாழ்ந்து வருபவர். தன் படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் தன்னை தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்பதை நினைக்காத நிலையில், அதையும் மீறி ரசிகர்கள் கொடுக்கும் அன்பால் அவர்களுக்காக படங்களில் நடித்து வருவதாக கூறி வருகிறார்.

இப்படி தனக்கென ஒரு வரைமுறை வகுத்து சிறிய வட்டத்தில் வாழ்ந்து வரும் அஜித், தன் மனைவி, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை என்றுமே விரும்பக் கூடியவர். இதன் காரணமாகவே வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே அஜித் நடித்து வருகிறார். இது போதாது என தனது பைக்கை எடுத்துக்கொண்டு உலகையே சுற்றி வருகிறார்.

Also Read: அட்லீக்கு மட்டும் கிடைக்கும் மாலை, மரியாதை.. கண்டுகொள்ளாமல் கை கழுவி விடப்பட்ட அஜித் நண்பர்

இப்படி அஜித் செய்வது ஒருபக்கம் நியாயமானதாக இருந்தாலும், வாழ வைத்த சினிமாவுக்கு இவர் செய்த விஷயங்கள் மிகவும் கம்மிதான். மற்ற நடிகர்களை பொறுத்தவரை படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், சினிமாவில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதையும் சரி செய்து, அதுகுறித்து பேசியும் வருகிறார்கள். ஆனால் நடிகர் அஜித் மட்டும் சினிமாவில் என்ன நடந்தாலும், அதுகுறித்து கண்டுக்கவே மாட்டார்.

ஏன் திரைப்பட நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது விழாக்களுக்கே கலந்துக் கொள்ளாமல் உள்ளார். இன்னும் சொல்லப்போனால் இவரது பட ப்ரோமோஷன்களில் கூட கலந்துக்க மாட்டார். மேலும் கூப்பிட்டு வைத்து விருது கொடுத்தாலும் அதை வாங்குவதற்கு கூட அஜித் வருவதில்லை. இப்படி படங்களில் மட்டுமே நடித்து, சம்பளம் வாங்கிவிட்டு, எங்குமே தலையை காட்டாமல் இருப்பது அஜித் மீது பெரும் விமர்சனமாக பார்க்கப்படுகிறது.

Also Read: 300 நாட்கள் கால்ஷீட், தலை தெறிக்க ஓடிய அஜித்.. கதை பிடித்தும் நடிக்க முடியாமல் போன காரணம்

இவர் இப்படி இருப்பது ஒரு 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை சரியானதாக பார்க்கப்பட்டாலும், தற்போது தமிழ் சினிமா வசூல் ரீதியாகவும் ,சரியான கதைக்களம் இல்லாமலும் அதலபாதாளத்தில் சென்று வருகிறது. இதெல்லாம் தெரிந்தும் கூட எவன் எக்கடு கெட்டு போனால் எனக்கு என்ன என்பது போல் அஜித் இருந்து வருகிறார். இதற்கு உதாரணமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பல நடிகர்கள் ஆசைபட்டு அவரிடம் பேசி வருகின்றனர்.

ஏனென்றால் தற்போது லோகேஷ் கனகராஜால் மட்டும் தான் தமிழ் சினிமா இந்திய அளவில் பிரபலமடைய காரணமாக அமைந்துள்ளது. இந்த சூழலில் இதுவரை லோகேஷ் கனகராஜை அழைத்து அஜித் ஒரு வார்த்தைக்கூட பேசாதது தான் ஆச்சரியமாக உள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் கூட அஜித்தை வைத்து படம் எடுக்க ஆசை என்று சொன்ன பின்பும் கூட அஜித் இது சம்பந்தமாக அவரிடம் பேசவில்லை. இதிலிருந்தே அஜித்துக்கு சோறுப் போட்ட சினிமா சம்பாரிக்க மட்டும் தான் அவர் பயன்படுத்தி வருகிறார் என்பது அப்பட்டமாக தெரிவதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 Also Read: தலைவர்-171 போஸ்டர் ரிலீஸால் கடும் கோபத்தில் லோகேஷ்.. நாலா பக்கமும் லாக் செய்யும் சன் பிக்சர்ஸ் மாறன்

Next Story

- Advertisement -