அஜித் என்றால் இன்று பலருக்கும் அவரின் மீது பெரிய மதிப்பும், நம்பிக்கையும் இருக்கிறது. தொழில் மீதிருக்கும் அவரின் தீவிர பக்தியும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

படிப்பு வராததால் 10 ம் வகுப்பு வரை நிறுத்திக்கொண்ட அஜித் எக்ஸ்ஃபோர்ட் கம்பெனியில் 4.1/2 வருடங்கள் பணியாற்றி சொந்தமாக ஈரோடில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் தொடங்க அது தோல்வியாய் முடிந்தது. ஆனால் இதுதான் அவரது வாழ்வின் திருப்புமுனை என்று சொல்லலாம்.

மாடலிங், டிவி விளம்பரங்கள் என அவரின் சினிமா பயணத்திற்கு அஸ்திவாரம் இட்டது.

அந்த 1 1/2 வருடம்

பல சோதனைகளை சந்தித்த இவருக்கு மிக வேதனையாக இருந்த தருணம் அந்த 1 1/2 வருடம். அமராவதி படத்திற்கு பிறகு உடல் நலம் சரியில்லாமல் போனது, பண பிரச்சனை, படம் இல்லாமல் போனது என தொடர்ந்து சந்தித்தவர் வீட்டிலேயே முடங்கிப்போனார்.

மணிரத்னம் தயாரித்து வசந்த் எடுத்த ஆசை படம் எனக்கு அங்கீகாரம் தந்தது. ஆனால் அவரின் தன்னம்பிக்கையால் கே.சுபாஷ் கொடுத்த பவித்ரா படம் அஜித்தை கைதூக்கிவிட்டது.

அதெல்லாம் ஒன்றும் இல்லை

அஜித்தை பொறுத்தவரை முதல் ஆளாக இருக்க வேண்டும் என்பதில்லை. தொடர்ந்து ஓடிக்கொண்டே பிசியாக இருக்கவேண்டும். அந்த1 1/2 வருடம் போல ஆகிவிடக்கூடாது என அப்போது முடிவு செய்தவர் தான்.

இப்போது வரை தன் கொள்கைகளில் தளராது அதையே செய்து வருகிறார். மேலும் அவர் சொல்வது சந்தோசமாக இருக்கவேண்டும் என கஷ்டப்பட்டு எல்லோரும் உழைக்கிறார்கள்.

ஆனால் வாழ்க்கையை அனுபவிக்க பலருக்கு தெரியவில்லை. இல்லாத பிரச்சனையை நினைத்து ஓடுகிறார்கள். கொஞ்சம் திரும்பி பார்த்தால் அதெல்லாம் ஒன்றும் இல்லை என சிம்பிளாக ஒரு நேர்காணலில் கூறுகிறார் அஜித்.