ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 3’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது.

Ragava-Lawrence

‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ ஆகிய பேய் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் வசூலை அள்ளினார் லாரன்ஸ். தானே அப்படங்களில் நாயகனாக நடித்து, பேய் படங்களை மக்கள் ரசிக்கும்படி இயக்கினார்.

தற்போது ‘காஞ்சனா 3’ படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளார் லாரன்ஸ். இதிலும் தானே நாயகனாக நடித்து, இயக்கி வருகிறார்.

இப்படத்திற்காக ஓவியா, வேதிகா மற்றும் நிகிதா என மூன்று நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிந்து வருகிறார்.

ragava lawrance
ragava lawrance

கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் ‘காஞ்சனா 3’ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது

மேலும் தற்பொழுது தனது ரசிகர் அஜீத்தின் வேண்டுகோளை ஏற்று அவரை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

Raghava Lawrence

பெரம்பலூரை சேர்ந்தவர் வளர்ச்சி குன்றிய அஜீத்(20). அவருக்கு நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அவரை சந்தித்து பேச வேண்டும் என்று விரும்பினார்.

தனது விருப்பத்தை வீடியோ மூலம் தெரிவித்தார்.

அஜீத்தை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் வீடியோவை பார்த்து அஜீத்தை சந்தித்த ராகவா லாரன்ஸை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

மேற்கொண்டு இந்த மாதிரி நிறைய ரசிகர்களை நீங்கள் சந்தித்து அவங்க ஆசையை பூர்த்தி செய்யணும் அண்ணா. இது என்னோட வேண்டுகோள். ரொம்ப சந்தோஷம் அண்ணா என ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

கடவுள் மனுஷ ரூபத்துல வருவார் உண்மை தான் ப்ரோ