32 வருஷமாக விடாமுயற்சியுடன் வெற்றியை தக்கவைத்த அஜித்.. அனல் பறக்கும் போஸ்டரை வெளியிட்ட லைக்கா

Ajith: போட்டி நிறைந்த சினிமா உலகில் வெறும் திறமை மட்டும் இருந்தால் போதாது அதிர்ஷ்டமும் இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என்பது பல பேருடைய வேதவாக்காக இருக்கிறது. ஆனால் இதை எல்லாம் சுக்கு நூறாக உடைக்கும் பொருட்டாக அஜித் சினிமாவிற்குள் எந்தவித சப்போர்டும் இல்லாமல் நுழைந்தார். அப்படி வந்த இவரை கேலியும் கிண்டலும் செய்து வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு பல சம்பவங்களை சந்தித்திருக்கிறார்.

ஆனால் அதையெல்லாம் படிக்கற்களாக பார்த்து ஒவ்வொரு அவமானத்திற்கு பின்னாடியும் வெற்றி நிச்சயம் என்பதற்கு முன் உதாரணமாக கிட்டத்தட்ட 32 வருஷமாக விடாமுயற்சியுடன் நடித்து வெற்றியை தக்க வைத்திருக்கிறார். அதிலும் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய அந்தஸ்து அஜித்துக்கு கிடைத்திருக்கிறது. அதாவது ரசிகர் மன்றம் வேண்டாம், ரசிகர்களை சந்தித்து பேசும் எண்ணமும் கிடையாது.

படம் சம்பந்தமாக எந்த பேட்டியும் கொடுக்க விரும்பாதவர், எதிலும் கலந்து கொள்ளாமல் நடிப்பு மட்டும் தான் என்னுடைய வேலை என்று நடித்து வரக்கூடிய அஜித்துக்கு சொல்ல முடியாத அளவிற்கு, ரசிகர்கள் சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள் என்றால் அது உண்மையிலேயே பாராட்டக்கூடிய விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் காதல் மன்னனாக இளசுகளின் மனதை கொள்ளை அடிக்கும் அளவிற்கு ஹேண்ட்சம் பாயாக இருந்த அஜித் தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் எந்தவித சாயமும் இல்லாமல் நிஜ தோற்றத்துடன் தைரியமாக நடித்துக் கொண்டு வருகிறார்.

அனல் பறக்கும் போஸ்டரை வெளியிட்ட லைக்கா

ajith lyca post
ajith lyca post

அப்படிப்பட்ட அஜித் பல போராட்டங்களை தாண்டி கடந்த வருடம் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். அந்த வகையில் படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதால் வருகிற அக்டோபர் 31ம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அந்த வகையில் அஜித்தின் விடாமுயற்சியே பாராட்டும் அளவிற்கு லைக்கா அனல் பறக்கும் போஸ்டரை வெளியிட்டு 32 ஆண்டு போராடி வந்த அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தையும் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை ஒட்டி ரிலீஸ் ஆகப்போகிறது.

அந்த வகையில் இப்படத்தில் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அஜித்தின் 32 ஆண்டு திரையுலக வாழ்க்கைக்கு அடி எடுத்து வைத்ததை கொண்டாடும் விதமாக வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இப்படி ஒரே நேரத்தில் நடித்து வரும் இரண்டு படங்களுமே ஜோராக உருவாகி வருகிறது. அதனால் அஜித்தின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக வரப்போற நாட்கள் திருவிழாவாக அமையப் போகிறது.

Next Story

- Advertisement -