சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கமலுக்காக அஜித் விட்டு கொடுத்த விஷயம்.. அடடே! அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரே!

Ajith Kumar: நடிகர் அஜித் குமார் எப்போதுமே இவர் நமக்கு ஒரு புரியாத புத்தகமாகவே இருக்கிறார். இவருக்கு அவருடைய ரசிகர்களுடனும், சக நடிகர்களுடனும் எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இதற்கு பெரிய காரணம் இவர் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் தன்னை தெரியப்படுத்திக் கொள்ளவில்லை என்பதால் தான். அதை தாண்டி தனக்கு யாரு நெருக்கம், யாருக்கு உதவி செய்கிறோம் என்பதை வெளியில் தெரியாத அளவுக்கு பார்த்துக் கொள்கிறார்.

மேலும் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவியை செய்து விட்டு வெளியில் சொல்லக்கூடாது எனவும் உத்தரவு இடுகிறார். சமூகத்திற்காக குரல் கொடுக்கவில்லை, ரசிகர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என இவர் மீது பல விமர்சனங்கள் இருந்து வருகிறது.

அடடே! அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரே!

இது எதையுமே அஜித் கண்டு கொள்ளாமல் தன்னுடைய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அஜித்துக்கு பெரிய போட்டியே விஜய் தான் என தமிழ் சினிமா ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுவும் உண்மை இல்லை என்பதற்கு ஏற்றவாறு விஜய்யுடனும் நல்ல நட்பு பாராட்டி வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் நடிகர் கமலஹாசனுக்காக இவர் செய்த ஒரு பெரிய விஷயம் வெளிவந்திருக்கிறது. இயக்குனர் சரண் நடிகர் அஜித்குமாருக்கு காதல் மன்னன் மற்றும் அமர்க்களம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர்.

இவர் தான் இந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். சரண் அஜித்குமார் உடன் இணைந்து அட்டகாசம் படத்தில் வேலை செய்ய எல்லாம் தயார் நிலையில் இருந்திருக்கிறது. அதே சமயம் தான் சரணுக்கு உலக நாயகன் கமலஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இது பற்றி அஜித்திடம் சரண் தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த படத்தை உடனே முடித்தாக வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். உடனே அஜித் கொஞ்சமும் யோசிக்காமல் முதலில் அந்த படத்தை முடித்துவிட்டு வாருங்கள், அதன் பின்னர் இந்த படத்தை பார்த்துக் கொள்ளலாம் என சொல்லி இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த விஷயத்தை இயக்குனர் சரண் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

Trending News