‘அஜித் என்றால் தன்னம்பிக்கை; அஜித் என்றால் தைரியம்; அஜித் என்றால் ஆச்சர்யம்’ எனச் சிலாகிக்கிறார்கள் சினிமா உலகில். அதற்கு ஏற்ப அஜித்தும் தன் சினிமா கரியரின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒவ்வொரு விநாடியையும் அவராகவே செதுக்கியிருக்கிறார்.

மைனர் மாப்பிள்ளை 1996ல் வெளிவந்த ஒரு நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். இதில் கதாநாயகனாக அஜித் குமார் நடித்துள்ளார். ரஞ்சித் முன்னனிக் கதாப்பாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தில் வடிவேலு, விவேக், ஸ்ரீவித்யா போன்றவர்களும் நடித்துள்ளனர்.

Aarambam Ajith

இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு, படப்பிடிப்புகளுக்கு பைக்கில்தான் செல்வார் அஜித். ‘மைனர் மாப்பிள்ளை’யில் நடித்தபோதுதான் சொந்தமாக வாங்கிய மாருதி 800 காரில் செல்லத் தொடங்கினார். அந்த கார் இன்னும் அஜித் கராஜில் பத்திரமாக இருக்கிறது!

அஜித், விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். இவர்கள் எப்படி தங்களது ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகளுக்கு கஷ்டப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

Ajith

அஜித்தை வைத்து மைனர் மாப்பிள்ளை என்ற படத்தை இயக்கியவர் விசி குகநாதன். இவர் ஒரு பேட்டியில் அஜித்தை பற்றியும், மைனர் மாப்பிள்ளை படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் பற்றியும் பேசியுள்ளார்.

மைனர் மாப்பிள்ளை படத்தை தொடர்ந்து ஒரு படம் செய்து தருவதாக அஜித் கூறினார், ஆனால் இதுவரை அவர் செய்யவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, மைனர் மாப்பிள்ளை படப்பிடிப்பின் போது மணிரத்னம் படத்தின் வேலைகள் இருக்கிறது செல்லலாமா என்று கேட்டார்.

ajith vivegam
ajith vivegam

நான் கொஞ்சம் கோபக்காரன், அப்போது அஜித் மிகவும் மோசமாக திட்டிவிட்டேன். அது அவருக்கு மன கஷ்டத்தை கொடுத்ததாக நடிகர் விவேக் அவர்கள் மூலம் கேள்விபட்டேன்.

அஜித் உங்களை என் மகன் போல நினைத்தேன், உங்களை திட்டுவதற்கு எனக்கு உரிமை இல்லை என்று அவர் கூறமுடியாது, ஆனால் அவர் மிகவும் நல்லவர்.

கஷ்டப்படுபவர்களுக்கு அவர் உதவி செய்வது போல் தமிழக மக்களுக்கும் அவர் உதவி செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்துள்ளார்.