Tamil Cinema News | சினிமா செய்திகள்
பன்னீர் சசிகலா ரிசல்ட்? பயணத்தை தள்ளிப் போட்ட அஜீத்!
அஜீத்தை பொருத்தவரை அவர் ஜெயலலிதாவின் சப்போர்ட்டர்! அவரது மறைவுக்கு பின், அதிமுகவுக்கும் அஜீத்திற்குமான தொடர்பு கம்மி. இருந்தாலும் அவரே வியந்த ஆளுமையின் கட்சியாச்சே? இப்போதிருக்கும் நிலைமை இப்படியே தொடருமா? கட்சி உயிரோடு மீளுமா? என்றெல்லாம் அக்கறையோடு கவனித்து வருகிறாராம். அவ்வப்போது மாறும் நிலவரங்களை தொலைக்காட்சி வாயிலாக அறிந்து கொள்ளும் அவர், ஒரு சின்ன அனுதாபத்தோடு காத்திருப்பதாக கூறுகிறது சினிமா வட்டாரம்.
இதற்கிடையில் மீண்டும் பல்கேரியாவுக்கு கிளம்புகிறதாம் ‘விவேகம்’ படக்குழு. பின்னி மில்லில் எடுக்கப்பட வேண்டிய பகுதிகள் முடிவடைந்து வேறொரு பிரமாண்டமான செட் பிலிம் சிட்டியில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் பல்கேரியா ஷெட்யூலை முடித்துவிடலாம் என்று நினைத்தால், இப்போதிருக்கிற திகுதிகு பரபர சூழ்நிலையில் நிம்மதியாக போக முடியுமா என்ன?
நாடே ஆவலோடு எதிர்பார்த்து வரும் அந்த முடிவு வந்துவிடட்டுமே என்ற முடிவுக்கு வந்தாராம் அஜீத். தமிழ்நாட்டில் ஒரு ஸ்திர ஆட்சி வரும் வரைக்கும் அவரது பல்கேரிய பயணத்தில் மாற்றம் வரும் போலதான் தெரிகிறது!
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
