அஜித் இப்போது விவேகம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு இன்டர்போல் அதிகாரி கேரக்டர். விவேக் ஓபராய் வில்லன். காஜல் அகர்வால் ஜோடி. அக்சராஹாசன் இன்னொரு ஹீரோயின். அஜித்தின் வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவா தான் இந்த படத்திற்கும் இயக்கம்.

பல்கெரியாவில் , ஹைதராபாத்தில், சென்னையில் என்று ஷூட்டிங் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் என்றார்கள். ஆனால், இந்த மாதத்தோடு முடியவேண்டிய படம் இன்னும் இழுக்கிறது. அதனால் ரிலீஸ் தேதியை ஜூன் 23 என்று யோசிக்கிறார்கள்.

அந்த நாளில் தான் அஜித்தின் முன்னாள் ஆஸ்தான முருகதாஸின் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும்,தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள படம் ரிலீஸ் என்று முருகதாஸ் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

விவேகம் படம் வெளியாகும் என்று சொல்லபடுகிறதே என்று முருகதாஸ் வட்டாரத்தில் சொன்னால், நாங்க நேருக்கு நேர் மோதியே தீருவோம் என்று சொல்லி வருகிறார்கள்.

ஆனால், விவேகம் போற ஸ்பீடில் ஆகஸ்டில்தான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.