fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தியேட்டரே இல்லாத நாட்டில் டிரெண்டிங் ஆன ‘விவேகம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தியேட்டரே இல்லாத நாட்டில் டிரெண்டிங் ஆன ‘விவேகம்

அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டீசர் ஏற்படுத்திய சுனாமி இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு நிற்காது போல தெரியவில்லை. உலகம் முழுவதும் இந்த 57 வினாடிகள் டீசர் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஒரு முழு திரைப்படம் கூட இந்த அளவுக்கு வரவேற்பை பெற்றிருக்குமா? என்பது சந்தேகம் தான்

இந்த நிலையில் சவுதி அரேபியால் கடந்த மூன்று நாட்களாக ‘விவேகம்’ டீசர் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆக உள்ளது. இதில் என்ன விசேஷம் என்றால் சவுதி அரேபியாவில் தியேட்டரே இல்லை. தியேட்டரே இல்லாத நாட்டில் ஒரு டீசர் டிரெண்டிங் ஆகிறது என்றால் அங்கு எந்த அளவுக்கு அஜித்தின் தீவிர ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த நிலையில் ‘விவேகம்’ டீசர் யூடியூபில் 87 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களையும், 3 லட்சத்திற்கும் மேலான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. வெகுவிரைவில் இந்த டீசர் ஒரு கோடி பார்வையாளர்களை பெ\ற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top