Ajiths-Vivegam-release
Ajiths-Vivegam-

அஜித் நடிப்பில் மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படம் விவேகம். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்க்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஏகப்பட்ட சிஜி வேலைகள் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 23ம் தேதியாக மாறலாம் என்று சொல்லப்பட்டது.

இதை அறிந்த சில ரசிகர்கள் மிகுந்த சோகத்தால் ட்விட்டரில் சிவாவிடம் ரிலீஸ் தேதி அறிவிக்குமாறு கேட்டு வருகின்றனர். தற்போது கிடைத்த தகவல் படி ஆகஸ்ட் 10 ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை, அடுத்த வாரம் விவேகம் சென்சாருக்கு செல்கிறது என்று கூறப்படுகிறது.