அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் ட்ரைலர் நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது. திரைபிரபலங்கள் அனைவரும் ட்ரைலர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.இந்நிலையில் ட்ரைலர் வெளியாகி அரைமணி நேரத்திலே ௧ லட்சம் லைக்ஸை அள்ளியது

வரும் 24ஆம் தேதி அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம் பிரமாண்டமாக ரிலீசாக இருக்கிறது.அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில் ‘விவேகம்’ படத்தின் சென்சார் சர்டிபிகேட்டின் புகைப்படம் சற்று முன் டுவிட்டரில் வெளியாகியுள்ளது. அதில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 149.29 மணி நேரம் என்று உள்ளது.

ஆனால் ஒரு தல ரசிகர் இந்த 149.29 க்கு ஒரு புதிய விளக்கம் அளித்துள்ளார். அதாவது 1 4 9 2 9 இந்த எண்களை கூட்டினால் 25 வருகிறது என்றும், அது அஜித்தின் 25 வருட திரையுலக பயண சாதனையை குறிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பார்த்திங்களா இந்த தல ரசிகர்கள்