விவேகம் என்பது அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிவா இயக்கிய இத்திரைப்படத்தில் விவேக் ஒபரோய், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டு தொடங்கியது.

வெற்றி இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி எல். ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அஜித் குமாருடன் பில்லா, ஆரம்பம் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய அனு வர்த்தன் இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டர். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில், கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்சரா ஹாசனும் கதாநாயகியாக நடிக்கிறார்.ajith vivegam

விவேகம் 2017 ஆகத்து 24 இல் உலகளவில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றிருப்பினும் திரையரங்கம் நிரம்பிய காட்சிகளை கொண்டு வணீக ரீதியாக ஒரு வெற்றி படமாகவே தெரிந்தது. பிரபல தமிழ் சினிமா விமர்சகர்களான பிரபல செய்தி நிறுவனம்  இப்படத்திற்கு 2.25 மதிப்பெண் கொடுத்தது.

யூடியூப் விமர்சனங்களில் தமிழ் டாக்கீஸ் மாறன் கொடுத்த விமர்சனம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு விமர்சனம் என்பதை தாண்டி தனி மனித தாக்குதலாக பார்க்கப்பட்ட அந்த விமர்சனத்திற்கு பெருவாரியான அஜித் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கண்டனத்தை தெரிவித்தனர்.

25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தை ஒரு ஒன் மேன் ஆர்மியாகக் காட்ட உருவாக்கப்பட்டுள்ள படம் விவேகம். வீரம் படத்தில் அண்ணன் தம்பிகள் பாசம், வேதாளத்தில் அண்ணன் தங்கை பாசம்… விவேகத்தில் கணவன் – மனைவி அன்பு! எதையும் தனி ஒருவராகச் சமாளிக்கும் ராணுவ உளவாளி அஜித் குமார். அவரது மனைவி காஜல். ரொம்ப அந்நியோன்னிமான தம்பதி.

படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது,ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.பின்பு வந்த ட்ரைலர் சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே.

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய ‘விவேகம்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தின் மொத்த வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளது.

கடுமையான எதிர்மறை விமர்சனங்கள், ஒருசில ஊடகங்களின் நேரடி தாக்குதலையும் மீறி இந்த படம் ரூ.200 கோடி வசூல் செய்தது உண்மையில் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் பெரிய அளவில் லாபம் இல்லை என்றாலும் ஓரளவு லாபமே என்று கூறுகிறார்கள். அதற்கு காரணம் இந்த படத்தின் பெரிய பட்ஜெட். சிறிய பட்ஜெட் படத்துடன் இந்த பெரிய பட்ஜெட் படத்தை ஒப்பிடாதிர்கள். தலைக்கு எப்பொழுதும் சினிமாவில் நல்ல வரவேற்ப்பு இருக்கும் அதேபோல் ரசிகர்களிடமும் நல்ல மதிப்பு இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here