Vivegam-Ajith

அஜித்தின் விவேகம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட பணியில் இருக்கிறது. மார்ச் 14ம் தேதி அஜித் சென்னையில் இருந்து பல்கேரியா கிளம்பியிருக்கிறார்.

அதோடு படப்பிடிப்பு மார்ச் 16ம் தேதியில் இருந்து தான் தொடங்குவதாக கூறப்படுகிறது.

இந்த படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்பியதும் படக்குழு டீஸரை வெளியிடுவார்கள் என்றும் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் அவ்வப்போது செய்திகள் வருகின்றன.

ஹாலிவுட் தரத்தில் சிவா இயக்கிவரும் இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷாரா ஹாசன் நாயகிகளாக நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்தின் இசையும் வேறலெவலில் இருக்கும் என அனிருத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.