சிவா இயக்கத்தில் அஜீத்தின் விவேகம் பட ஷூட்டிங் பல்கேரியாவில் நடந்து வருகிறது. இப்படத்துக்காக உடற்கட்டை கட்டுமஸ்தாக்கி இருக்கிறார் அஜீத். அவரது தோற்றத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் டைட்டில் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்தது. அதற்கு விவேகம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஷெட்யூல் இதே மாதம் தரமணியில் உள்ள எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் நடக்க உள்ளது. இதற்காக அங்கு, வில்லன்களின் கூடாரம் போன்ற பிரமாண்ட செட் போட உள்ளனர்.

இதில் 10 நாட்களுக்கு மேல் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் அஜீத் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆகஸ்ட் 10-ம் தேதியே அதாவது 5 நாள் முன்கூட்டியே ரிலிசாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.