அஜித்தின் விவேகம் ஹிட்டோ ஹிட் ! உலகின் முன்னணி பிசினஸ் பத்திரிகை Forbes.

விவேகம் படத்தின் வெற்றி என்று அஜித் ரசிகர்கள் தரப்பும் தோல்வி என்று அஜித்தை பிடிக்காதவர்கள் தரப்பும் கூறி வரும் நிலையில் உலகின் முன்னணி பிசினஸ் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஊடகமே விவேகம் சூப்பர் ஹிட் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

நான்கு நாட்களில் ‘விவேகம்’ படத்தின் இந்திய வசூல் ரூ.69.5 கோடி என்றும், வெளிநாட்டு வசூல் ரூ.36.5 கோடி என்றும் மொத்தம் ரூ.106 கோடி ரூபாய் வசூல் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.127 கோடி என்ற நிலையில் சாட்டிலைட் ரைட்ஸ்,

ஆடியோ ரைட்ஸ் மற்றும் நான்கு நாள் வசூல் ஆகியவைகளை சேர்த்தால் இந்த படம் தற்போதே லாபம் என்றும் இனிமேல் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் லாபம் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.comedian in vivegam

மேலும் சென்னையில் இந்த படம் நான்கு நாட்களில் சுமார் ரூ.6 கோடி வசூல் செய்து ‘கபாலி’ மற்றும் ‘பாகுபலி 2’ வசூலை மிஞ்சிவிட்டதாகவும் அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனத்தையும் தாண்டி இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது

Comments

comments

More Cinema News: