Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்
ஒரு படத்தின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அந்த படத்தில் இருந்து வெளிவரக்கூடிய பாடல்கள் டிரெய்லர் என வெளிவரும் அறிவிப்புகளை பொருத்து உள்ளது. செய்திகள் மக்களிடையே மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெறும்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த இசை வெளியீடு விழாவில் த்ரிஷா , பாபி சிம்ஹா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மற்றும் சிம்ரன் பலர் பங்கேற்றனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சூப்பர்ஸ்டார் படத்தில் முக்கிய கதாபாத்திரம் நடித்துள்ளார். பேட்ட படமும் விஸ்வாசம் படமும் ஒரே நாள் மோத உள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் விஸ்வாசம் படத்தின் எந்த ஒரு அப்டேட் வெளிவரவில்லை இதனால் அஜித் ரசிகர்கள் மனதில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த ஏமாற்றம் தற்பொழுது முடிவாக உள்ளது. அதாவது இன்று மாலை ஆறு மணி அளவில் விசுவாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் படத்தின் பாடல் யார் வெளியிடுகிறார் என்று தெரியவில்லை.

Viswasam
பொதுவாக குத்துப் பாடல்களை முதலில் வெளியிடுவார்கள் ஏனென்றால் அவைகளில் ரீச் ரொம்ப அதிகமாக இருக்கும். அப்படித்தான் விஸ்வாசம் படத்திலிருந்து பாடலும் இருக்கும் என செய்திகள் வெளிவந்துள்ளது.
