fbpx
Connect with us

விஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்

ajith-viswasam-800

Reviews | விமர்சனங்கள்

விஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்

விஸ்வாசம் படம் – அஜித்தின் விமர்சனம்

இந்த மாதத்தின் தலைப்புச் செய்தியே அஜித் சிவா இணைந்து வெளிவர இருக்கும் விஸ்வாசம் படமும் ரஜினியின் பேட்ட படம்தான். விஸ்வாசம் படத்தின் பிரமோஷன் வேலைகளை சரியான நேரத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் அந்த படத்தினை பற்றிய பேச்சுகள் வந்து கொண்டே இருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் சரியான திட்டமிடல், சிவா அண்ட் டீம் சரியாக இதனை செய்கிறார்கள். படையப்பா காலகட்டத்தில் ரஜினிகாந்த் செய்ததுதான். இப்பொழுது அதனை சரியாக பயன்படுத்தி வருகிறார் அஜித்.

எடிட்டர் ரூபன் அவர்கள் நான் தலைவர் ஃபேன், அதனால் தலைவர் படத்தை பார்த்துவிட்டு விஸ்வாசம் படத்தினை பார்ப்பேன் என கூறினார். ஏனென்றால் படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது படத்தின் ஒரு சில முக்கியமான வேலைகள் முடிந்து பின்னர் தயாரிப்பாளர், இயக்குனர், எடிட்டர் மற்றும் நடிகர் இவர்கள் அனைவரும் படத்தை போட்டு போட்டு பார்ப்பார்கள்.

ஆனால் படம் நன்றாக இருக்கிறதா என்பதை அவர்களால் கணிக்க முடியாது. அடிக்கடி எடிட்டிங்கை மாற்றி மாற்றிக் கொண்டிருப்பார்கள் அதெல்லாம் எடிட்டரின் கையில்தான் உள்ளது.

அதனால் அவரால் விஸ்வாசம் படத்தை பலமுறை பார்த்து விட்டேன் அதனால் பேட்ட பார்ப்பேன் என கூறி மேலும் விஸ்வாசம் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்கவில்லை செமயா இருக்கும் என கூறினார். சமீபத்தில் ஒரு பேட்டியில் விஸ்வாசம் பட டைரக்டர் சிவா அவர்கள் ‘படத்தை முழுவதுமாக பார்த்த அஜித் மிகவும் சந்தோஷப்பட்டு இதுவரை நாம பண்ணி நாலு படங்களில் இதுதான் பெஸ்ட்’ எனவும் அதிலும் ஒரு சில காட்சிகளை சொல்லி சூப்பர் என சந்தோசப்பட்டார் என சிவா கூறினார்.

ஆக மொத்தம் படம் பார்த்த அனைவருக்கும் படம் பிடித்து விட்டது. இந்த பொங்கல் தல பொங்கல்தான் இருக்குமென நம்புகிறோம் அதேநேரத்தில் தலைவர் படம் மரண மாஸா இருக்கிறது எனவும் செய்திகள் பரவியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Reviews | விமர்சனங்கள்

Advertisement

Trending

To Top