Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிங்கம் போல் புல்லட்டில் வளம் வரும் அஜித் விஸ்வாசம் மாஸ் அப்டேட்.!
தல அஜித் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் அஜீத் பல காட்சிகளில் புல்லட் பைக்கில் வந்து மாஸ் காட்டியுள்ளார் என்ற தகவல் தற்பொழுது லீக் ஆகியுள்ளது, படத்தின் படபிடிப்பு இறுதிகட்ட நிலையை நெருங்கி விட்டது, படபிடிப்பு தற்பொழுது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

ajith viswasam
இந்த படத்தில் அஜித் வழக்கமாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்துள்ளார் மேலும் இரண்டு அஜித் நடித்துள்ள நிலையில் மற்றொரு அஜித்தின் கெட்டப் பர்ஸ்ட் லுக்கில் வந்ததுடன் சரி அதன் பிறகு எந்த புகைப்படமும் வெளியாகவில்லை.

ajith-viswasam
இந்த நிலையில் அஜித்தின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்தது, அந்த புகைப்படத்தில் அஜித் கூண்டுக்குள் சண்டை போடும் காட்சி வைரலாகி வந்தது இந்த நிலையில் அஜித் புல்லட் பைக்கில் பல காட்சிகளில் வருகிறாராம் இந்த செய்தி தற்பொழுது வைரலாகி வருகிறது.
