தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நடிகர் தல அஜித் இவர் தனக்குள் பல திறமைகளை வைத்துள்ளார், அஜித் ஒரு பைக் ரைடர் அதேபோல் கார் ரேசரும் கூட, அஜித்திடம் பைலட் லைசன்ஸ் இருக்கிறது, இவர் சக நடிகர்களுக்கு உணவு சமைத்து அன்புடன் பரிமாறுவதை யாரும் அடிச்சிக்க முடியாது அவ்வளவு அன்பாக கவனிப்பார், அதுமட்டும் இல்லாமல் இவர் புகைப்படம் எடுப்பதில் வல்லவர் அருமையாக புகைபடம் எடுப்பார்.

Ajith-Kumar

தல அஜித் விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க கமிட் ஆகியுள்ளார், விசுவாசம் படத்திற்கு D இமான் இசையமைக்ககிறார் இதை அவரே அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

ajith

அஜித் தற்பொழுது துப்பாக்கியை கையில் எடுத்துள்ளார்,தல நேற்று சென்னையில் உள்ள Rifle Club-ல் கையில் துப்பாகியுடன் இருந்துள்ளார் இந்த புகைபடம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ajith

இது அவருடைய பொழுது போக்கிற்க்காகவா அல்லது விசுவாசம் படத்திற்காக பயிற்சி எடுகிறாரா என்பது தெரியவில்லை அஜித்தின் விசுவாசம் படம் ஜனவரியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் கதை முடியாததால் மார்ச் மாதம் தொடங்கபோகிறது, இந்த புகைபடத்தில் இருக்கும் அஜித் முறுக்கு மீசையுடன் கம்பீரமாக இருக்கிறார் இந்த புகைபடம் வைரலாகி வருகிறது.

ajith
ajith