Tamil Cinema News | சினிமா செய்திகள்
விசுவாசம் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகர்.! தெறிக்க விடலாமா

தல அஜித் வீரம்,வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக தற்பொழுது விசுவாசம் படத்தில் சிவாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் வந்ததுமே சமூக வலைத்தளத்தில் ட்ரென்ட் செய்தார்கள் அஜித் ரசிகர்கள்.
விசுவாசம் என அறிவித்துள்ள இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார் இவர் இதற்க்கு முன் அஜித்துடன் பில்லா படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் படத்திற்கு டி.இம்மான் இசையமைக்க இருக்கிறார், சமீபத்தில் விசுவாசம் படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார் என அறிவித்தார்கள்.
இதனை அடுத்து இப்பொழுது வீரம்,வேதாளம், ஆகியபடத்தில் நடித்த பிரபல நடிகரான தம்பி ராமாவும் தற்பொழுது விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார் இவர் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் என தகவல் கசிந்துள்ளன அதனால் அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
