அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார்.இந்த படத்தின் டைட்டில் விசுவாசம் என்றும் அறிவித்துவிட்டார்கள் படக்குழு.

ajith

மேலும் அஜித் இந்தப்படத்தில் புது விதமாக தோற்றத்தில் மாறியுள்ளார். தொடர்ந்து பெப்பர் சால்ட் லுக்கில் நடித்த அஜித் நியூ லுக் மாறியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

இந்த படத்தில் தலை முடி கருமையாக மிகவும் இளமையுடன் அஜித் நடிக்க இருக்கிறார் தற்பொழுது அஜித் இளமையுடன் இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது,

Thala #Ajith sir latest video. | #Viswasam |

A post shared by Ajith (@ajithfc) on

முன்னதாக அஜீத் தனது மகனின் பள்ளியில் நடந்த விழாவுக்கு சென்றபோது அவர் தலைமுடி ஏதோ வித்தியாசமான நிறத்தில் இருந்தது. ஆனால் தற்போது முழுவதும் கருப்பு நிறமாக மாறியுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.