சிவா இன்று தமிழ் சினிமாவின் மாஸ் டிரைக்டர் அவரிடம் படம் பன்ன இப்ப இருக்கிற மாஸ் ஹீரோ எல்லோரும் வெயிட்டிங். எடுத்த 4தமிழ் படத்தில் 4 படங்களும் மிகப்பெரிய வெற்றி.

Siva-and-ajith
Siva-and-ajith

நான்காவது படமான விவேகம் பலரில் சதியால் கலவையான விமர்ச்சனகளை பெற்றது ஆனாலும் வெற்றிபெற்றது இதில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டது என்பது தான் உண்மை. தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய லாபம் கிடையாது காரணம் பெரிய பட்ஜெட் படம்.

ஓவர் சீஸ் பொறுத்த வரை எந்த பெரிய நடிகர்கள் படமும் நஷ்டத்தை சந்திக்காது. கேரளாவில் படம் ஓரளவு வசூல், கர்னாடகம் நல்ல வசூல். தெலுங்கு நல்ல வசூல்.

ajith-director-siva
ajith-director-siva

தழிழ்நாட்டில் செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரண்டு ஏரியாவிலும் 50நாட்கள் ஓடியது. இன்றைய நாட்களில் ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் அந்த ஆண்டவனே இருந்தும் படத்தை இந்த நாளில் காசு கொடுத்து ஓட்ட முடியாது அதுதான் உண்மை.

ajith

மீதி உள்ள 5ஏரியாவில் உண்மை நிலவரத்தை மறைக்கப்பட்டு விட்டது . C சென்டரில் இந்த படம் முதல் 4நாட்கள் ஒரு டிக்கட்டின் விலை 250 ஆனால் அவர்கள் வழங்கப்பட்ட டிக்கெட்டில் அச்சிடப்பட்ட விலை 04 ரூபாய் 80 பைசா இதே நிலை தான் தளபதி படத்திற்கும்.

ajith

இப்படி இருக்கையில் நாம் என்றுமே உண்மையான வசூலை தெரிந்து கொள்ள முடியாது.மேலும் அஜித் சிவா மீண்டும் விசுவாசம் படம் மூலம் இணைகிறார்கள் இந்த படத்தின் பூஜை இம்மாதம் ஆரம்பிக்கலாம் என எதிர்பாக்க படுகிறது.

மேலும் இந்த படத்தின் டைட்டில் கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது படக்குழு இது அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

விஸ்வாசம் படத்திற்கு அனிருத்தை தான் சிபாரிசு செய்துதுள்ளார் சிவா  ஆனால் தயாரிப்பு தரப்போ தொடர்ச்சியாக அனிருத் மியூசிக் வேண்டாம் என கூறிவிட்டார்கள் மேலும் ஒரு மற்றம் வேண்டும் என்று  யுவனை கமிட் செய்தனர்.

Aniruth

தற்போது யுவனுக்கு சம்பளம் நிர்ணயம் பன்னுவதில் இழுபறி உள்ளதால் அவர் விலகியதாக செய்திகள் வெளிவருகின்றது. ஒரு வேலை அவர் விலகும் பட்சத்தில் அனிருத் இனைய கூடும். விவேகம் மற்றும் வேதாளம் ஆகிய இரண்டு படத்திலும் அனிருத் பூந்து விளையாடி இருப்பார்.

yuvan-shankar-raja

அது மட்டும் இல்லாமல் விஸ்வாசம் படத்தின் கதை லோக்கல் ஸ்கிர்ப்ட்  அடிப்படையில் சிவா தயாரித்துவருகிறார். வட சென்னை பொறுத்து கதை அமையும் என கூறிவருகிறார்கள் அதனால் அனிருத் இசையமைப்பாளாராக இருந்தால் படத்திற்கு கூடுதல் பலம் படத்தின் பாடல் தாறுமாறாக அமையும்.