உச்ச நடிகர் என்றாலே படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை இணையத்தில் வதந்திகள் வந்து கொண்டேதான் இருக்கும், தற்பொழுது அஜித் நடிக்கும் விசுவாசம் படம் மற்றும் விஜய் நடிக்க இருக்கும் விஜய் 62 பற்றிய வதந்திகள் தினம் தினம் வந்துகொண்டே இருக்கிறது.

ajith

மேலும் சமீபத்தில் அஜித் படத்தில் நிவின் பாலி நடிப்பதாக கூறினார்கள் ஆனால் நிவின் பாலி அதை மறுத்துள்ளார்.தற்பொழுது அஜித்தின் விசுவாசம் படத்தில் நடிகர் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

நடிகர் அரவிந்த்சாமி வில்லனாக விசுவாசம் படத்தில் நடித்தால் படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே எகிறும் என தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள். ஜனவரி மாதம் 19-ம் தேதி விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது.