தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார் இவரின் ரசிகர்கள் பட்டாளத்தை யாராலும் கணிக்க முடியாது, தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படத்தை தொடர்ந்து விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாராபூர்வ அறிவிப்பை அறிவித்தார்கள் இந்த படத்தின் டைட்டில் இதற்க்கு முன் விசுவாசம் என அறிவித்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

visuvasam

பின்பு எடிட்டர் ரூபன் நான் விசுவாசம் படத்தில் இருக்கிறேன் என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்,பின்பு நீண்ட நாட்களாக எந்த அறிவிப்பும் வராத நிலையில் நேற்று இந்த படத்தின் நடிகையை அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள் இதனை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்தார்கள்.

ajith visuvasam

விசுவாசம் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கிறார்  இந்த படத்தில் நயன்தாராவுக்கு 5 கோடி சம்பளம் என செய்திகள் வந்துள்ளன, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

nayanthara

ஆனால் தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நயன்தாராவும் ஒருவர் இவர் சமீபத்தில் நடித்த வேலைக்காரன் படத்திற்கும் அவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்று கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.