தல அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார், இவர்கள் இணையும் படத்தின் டைட்டில் விசுவாசம் என படக்குழு அறிவித்துவிட்டார்கள் பின்பு எந்த அறிவிப்பும் அறிவிக்க படவில்லை வருகிற பிப்ரவரி 22 படபிடிப்பு துவங்கும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.

ajith

படபிடிப்பு குழு திரைகதை அமைப்பதில் மிகவும் மும்பரமாக ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் விசுவாசம் படத்தில் நடிப்பதற்கு நடிகை ஸ்ரதா ஸ்ரீநாத் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழில் இதுவரை 4 படங்கள் மட்டுமே நடித்துள்ளார் அதில் ஒன்று விக்ரம் வேதா இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது.

shraddha-srinath

இவர் நடிப்பிலும் கவர்ச்சியிலும் மற்ற நடிகைகளை விட சளைத்தவர் கிடையாது ஆனால் அஜித்திற்கு ஜோடியாக ரசிகர்கள் இவரை ஏற்று கொள்வார்களா என கேள்வி எழுந்துள்ளது.

shraddha-srinath

இதை பற்றி படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த பொழுது, இவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்  இன்னும் இவரை கமிட் செய்யவில்லை அதனால் இவர் நடிக்கலாம் இல்லை என்றால் வேறு நடிகர் நடிக்கலாம் என கூறியுள்ளார்கள் படக்குழு.

shraddha-srinath

விசுவாசம் படக்குழு இவரையே நடிகையாக புக் செய்யலாம்  அஜித் , ஸ்ரதா ஸ்ரீநாத் ஜோடி ரசிகர்களுக்கு பிடித்துப்போகவும் செய்யலாம்..! பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்று.