Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன் காதலியுடன் விஸ்வாசத்தில் களமிறங்கும் தல…

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்துக்கு நாளுக்குநாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படம் குறித்து வெளியாகும் தகவல்கள் ஒவ்வொன்றும் அந்த ஹைப்பை அதிகப்படுத்தும் வகையிலேயே இருக்கிறது.

வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கப் போவதாகத் தகவல் வெளியான நாளில், அதற்குக் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் விவேகம் கொடுத்த பாடம், அஜித்துக்கு மேலும் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டும் என இயக்குநர் சிவா தீவிரமாக உழைத்து வருகிறார். அதன்பிறகு விஸ்வாசம் படம் குறித்து வெளியான தகவல்கள் ஒவ்வொன்றும் அடடே ரகம் என்றே கூறலாம். நாயகியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடமல் தல கலக்கி வருவது. இரண்டு வேடங்களில் அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கு விடை சொல்லி மீண்டும் இளமையான லுக்கில் அஜித் நடிப்பது என ஓவ்வொரு தகவலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதில், அஜித் தந்தை மற்றும் மகன் என இரண்டு ரோல்களில் அஜித் நடிக்கிறார். தந்தை அஜித்துக்கு நயன் ஜோடியாகவு, மகன் அஜித்துக்கு சாக்‌ஷி அகர்வால் ஜோடியாகவும் நடிப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் முதல் ஷெட்யூலை படக்குழு முடித்திருக்கிறது. இதில், அஜித் – நயன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள், யோகி பாபு, திலக் ரமேஷ், தம்பி ராமையா உள்ளிட்டோர் இடம்பெற்ற காட்சிகளும் ஷூட் செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் சென்னையில் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில், இளமையான அஜித் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.

படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்க இருப்பதால், அந்த புகைப்படம் எங்கும் வெளியாகமல் படக்குழுவினர் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். படம் குறித்த தகவல்களைப் படக்குழுவினர் சீக்ரெட்டாக வைத்திருந்தாலும், அவ்வப்போது ஒரு சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அந்த வகையில் ரேஸ் பிரியரான அஜித்துக்கென படத்தின் பிரத்யேகமாக பைக் ஒன்று வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் அஜித்துடன் பெரும்பாலான காட்சிகளில் தோன்றும் அந்த பைக் படம் ரிலீஸானதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று டிரண்டாகும் என்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top