தல அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார், இவர்கள் இணையும் படத்தின் டைட்டில் விசுவாசம் என படக்குழு அறிவித்துவிட்டார்கள் பின்பு எந்த அறிவிப்பும் அறிவிக்க படவில்லை வருகிற பிப்ரவரி 22 படபிடிப்பு துவங்கும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.

ajith visuvasam

இந்த நிலையில் அஜித் விசுவாசம் படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது இதனை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள் இந்த வாரம் அஜித் ரசிகர்கள் எதிர்பாத்த தகவல் வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் தியாகராஜன் கூறியிருந்தார் அதேபோல் அஜித் படத்தின் அறிவிப்பு அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கிறது.

visuvasam

படத்தின் நடிகை மற்றும் வில்லன் யார் யார் நடிக்க போகிறார்கள் என எந்த அறிவிப்பும் இதுவரை அறிவிக்கபடாமல் இருந்தது, ஆனால் திரைக்கதை தயாரிப்பதில் மொத்த படகுழுவும் முழுமையாக மூழ்கியுள்ளது. சமீபத்தில்  இந்த படத்தின் எடிட்டராக வேதாளம், விவேகம் படத்தில் பணியாற்றிய ரூபனே கமிட் ஆகியுள்ளாராம், இதை அவரே தெரிவித்தார்.

மேலும் தற்பொழுது நடிகை பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளார்கள் படக்குழு ஆம் விசுவாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க இருப்பது நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராதான் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.