தல அஜித்தை பொறுத்தவரை தன் சினிமா வாழக்கை வேறு பர்சனல் லைப் வேறு என்று பிரித்து வாழுபவர். படங்களில் நடிப்பது இவரது தொழிலாக இருந்தாலும், தன் ஹாபி, பேஷன் என்று அதற்கும் தனி நேர ஒதுக்குவார். பைக், கார் ரேஸிங் , போட்டோகிராபி, மினி ஹெலிகாப்டர் போன்றவை இவரது ஆர்வங்களில் சில.

தற்பொழுது தயரிப்பாளர்களின் சங்கத்தின் போராட்டம் காரணமாக ஷூட்டிங் எதுவும் நடக்கவில்லை. அதனால் விசுவாசம் படம் துவுங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனிதர் எம்.ஐ.டி பொறியியல் கல்லூரி சென்றுள்ளார்.

MIT Chrompet

க்வாட்காப்டர் (Quadcopter)

ஏரோமாடெல்லிங் துறையில் தற்போதைய வளர்ச்சி இது தான். நம் அரசு கூட இந்த துறையில் ஆய்வு மேற்கொள்ள பணம் ஒதுக்கியுள்ளது. இந்த டெக்னலாஜி பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியில் உள்ள ஏரோ மாடலிங் (AERONAUTICAL) டிபார்ட்மென்டுக்கு சென்றுள்ளார் அஜித்.

Quadcopter

அங்குள்ள மாணவர்களிடம், தனது சந்தேகங்களை கேட்டறிந்திருக்கிறார். நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு அவரை சந்தித்துள்ளனர் மாணவர்கள். “சார் 12 மணி நேரம் காத்திருக்கிறோம் உங்களை காண” என்று மாணவர்கள் கூற, அதற்கு அஜித் “உங்களை பார்க்க நான் 26 வருடமாய் காத்திருக்கிறேன்” எனக் கூறி மாணவர்களை நெகிழ வைத்துள்ளார் அஜித்.

MIT
இதோ அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ..

இந்த போட்டோ மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றது.