fbpx
Connect with us

Cinemapettai

ரஜினிக்கு வில்லனான அஜித் பட வில்லன் !

ரஜினிக்கு வில்லனான அஜித் பட வில்லன் !

enthiran-2.0அஜித் நடித்த ‘பில்லா 2’ படத்தில் அட்டகாசமான வில்லனாக நடித்தவர் சுதன்ஷூ பாண்டே (Sudhanshu Pandey) என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்திற்கும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘2.0’ படத்தில் வில்லனாக நடிக்க ஏற்கனவே அக்ஷயகுமார் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே., ஆனால் இவர் ரோபோ வில்லன் என்பதும் சுதன்ஷூ பாண்டே மனித வில்லனாக நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் பாகமான ‘எந்திரன்’ படத்தில் விஞ்ஞானி வேடத்தில் வில்லனாக நடித்த டேன்னி டெங்ஜாங்பா அவர்களின் மகனாக 2.0 படத்தில் சுகன்ஷூ பாண்டே நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைகா புரடொக்ஷன்ஸ் இந்த படத்தை ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top