Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரோட்டுக் கடையில் சமையல்காரராக மாறிய அஜித் வில்லன்

பிரபல நடிகர் அருண் விஜய் ரோட்டு கடையில் தனக்கு தேவையான ஆம்லெட்டை அவரே போட்டு கொண்ட புகைப்படம் வைரலாக தொடங்கி இருக்கிறது.

பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மூத்த மனைவி முத்துக்கண்ணு ஆகியோரின் மகன் அருண் விஜய். விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவும் ஒரு பிரபல நடிகை. இவரின் மகள்களான ப்ரீத்தா, வனிதா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரும் தமிழ் சினிமாவில் நடித்து இருக்கிறார்கள். இத்தனை நடிகர்களை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும், அருணுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் நாயகன் என்ற அந்தஸ்து கிடைக்க அருண் விஜய் 17 வருடங்கள் காத்திருந்தார். அவரின் திரை வாழ்வில் தடையறத் தாக்க படம் தான் மெகா ஹிட் அடித்தது.

இதை தொடர்ந்து, அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்தார். அப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் வில்லன் வேடமேற்று இருக்கிறார். தற்போதே, கேரியரில் ஏற்றம் கண்டு வருகிறார் அருண் விஜய்.

இந்நிலையில், அருண் விஜயின் ஒரு டுவீட் ரசிகர்கள் மத்தியில் வாவ் சொல்ல வைத்திருக்கிறது. அப்பதிவில், காலை சாப்பாட்டிற்காக ரோட்டு கடையில் எனக்கு தேவையான வெள்ளை கரு ஆம்லெட்டை, உடைத்த நிலக்கடலையை தூவி செய்து கொண்டேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அங்கு எடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். அருண் இத்தனை எளிமையானவரா என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top