Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழில் 15 வருடத்திற்கு பிறகு 41 வயதில் நடிக்க வருகிறார் விஜயகாந்த், அஜித், விக்ரம் பட நடிகை.!

ajith-vijayakanth

தமிழில் 15 வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் அஜித் விக்ரம் பட நடிகை.! அதுவும் இவ்வளவு இளமையுடன்

தமிழ் சினிமாவில் நடிகை பிரியங்கா திரிவேதி விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடித்த ராஜா திரைப்படத்திலும் விக்ரம் நடித்த காதல் சடுகுடு படத்திலும் மேலும் ஒரு சில படங்களிலும் நடித்திருந்தார்.

ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு அமையாததால் பெங்காலி இந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வந்தார், மேலும் பிரபல இயக்குனரான உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

priyanka

priyanka

தமிழில் மீண்டும் களம் இறங்க இருக்கிறார் இவர் தற்போது தமிழில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனனம், இது 2014ம் ஆண்டுதான் வெளியானது அதன் பிறகு தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார்.

priyanka

priyanka

தற்பொழுது பிக்பாஸ் மகத் yashika நடிக்கும் திரில்லர் படத்தில் பிரியங்கா திரிவேதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் நடிப்பது பற்றி பிரியங்காவிடம் கேட்டபொழுது அவர் கூறியதாவது படத்தின் கதையையும் என்னுடைய கதாபாத்திரத்தையும் கேட்டேன் இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்குவதாலும் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடித்து விட்டது ஒப்புக்கொண்டேன் தமிழில் நடிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

priyanka

priyanka

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top