விக்ரம் செய்த அநியாயம்.. கூட்ட நெரிசலில் சிக்கி போலீசிடம் தடி அடி வாங்கிய விசுவாசிகள்

தமிழ் சினிமாவில் தற்போது ஒவ்வொரு நடிகரும் தனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நிரூபிக்க சில செயல்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் விஜய் நெய்வேலியில் படப்பிடிப்பு முடிந்ததும் ரசிகர்களுடன் செல்பி எடுத்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் அஜித் அவர்கள் ஒரு சில மாதங்களாக நிறைய போட்டோக்களை வெளியிடுகிறார், அதுமட்டுமின்றி ரசிகர்களையும் சந்தித்து வருகிறார். அஜித் தற்போது திருச்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ளும் போது ரசிகர்களை சந்தித்தார். ஆனால் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தும் அளவிற்கு சென்றது. அதை புரிந்துகொண்டு எப்படியோ அந்த பிரச்சினையை சரி செய்து விட்டார் அஜித்.

Also read: அந்நியன் பட சாதனையை முறியடித்த விஜய்.. 275 நாட்கள் ஓடிய திரைப்படம்

இப்பொழுது அதே பாணியில் விக்ரம் தனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க. இத்தனை நாள் சத்தமில்லாமல் இருந்தவர் தற்போது திருச்சியில் தன்னுடைய படத்தின் புரமோஷனுக்காக ரசிகர்களை சந்திக்க ஒரு பெரும்  கூட்டத்தினை கூட்டி பிரச்சினை உருவாகி விட்டார். அதில் மிகப்பெரிய தடியடி, தள்ளுமுள்ளு போன்ற விஷயங்கள் நடைபெற்றதால் விக்ரமுக்கு மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படுகிறது.

இத்தனை நாள் விக்ரம் அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தார், இதுவரை அவர் ரசிகர்களை சந்தித்தார் என்ற செய்தி கூட நம் கேட்டது கிடையாது. தற்போது எதற்காக இவர் இந்த கூட்டத்தை கூட்டினார் என்பது நன்றாக தெரிகிறது தன்னுடைய படம் நன்றாக ஓட வேண்டும் மற்றும் எனக்கும் கூட்டம் இருக்கிறது என்பதை காட்டவே இதனை செய்து இருக்கிறார்.

Also read: காதுகளை பாதுகாத்துக்கோங்க, அஜித் எச்சரித்த 3 விஷயங்கள்.. வெளிவந்தது விடுகதைக்கான விடை

ஆனால் ரசிகர்கள் இதனை புரிந்து கொள்ளாமல் ஒரு நடிகரை பார்ப்பதற்காக இப்படி கூட்ட நெரிசலில் சிக்கி போலீசிடம் தடி அடி வாங்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். ரசிகர்களின் முட்டாள்தனத்தை இந்த நடிகர்கள் பயன்படுத்தி அவர்களை மன்னித்து விடுங்கள் என்று ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள்.

இனிமேல் திருந்த வேண்டியது நடிகர்கள் அல்ல. அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் திருந்த வேண்டும். என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இதனை மாற்ற வேண்டியது நடிகர்களின் கடமையாக கருதப்படுகிறது.

Also read: விபூதியால் பிரச்சனையில் சிக்கிய விக்ரம், ஜிவி பிரகாஷ்.. பெரிய மனுஷனாய் நடந்து கொண்ட சாண்டி