எப்படியாவது மீண்டும் தல, அடுத்து தளபதியை இயக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு . மங்காத்தா படம் மெகா ஹிட்டுக்கு பிறகே அடுத்த படமும் சேர்ந்து பண்ணலாம் என்று சொன்னார் தல.
இயக்குநரோ இப்ப உங்களுக்கு கதை இல்லை என்று கூலாக சொன்னார். அதன் பின்னர்தான் நடிகர் சூர்யா குடும்பத்தில் சிக்கி மேலும் வாய்ப்பை விட்டார்.

இப்போது தன்னுடைய மார்க்கெட்டை புதுப்பிக்க இரண்டில் ஒருவரை இயக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். அஜித்திடம் நடிகரிடம் கதை சொல்ல அப்ரோச் பண்ணியபோது அவர் வைத்த கண்டிஷன் நம்பர் 1 – கதையில் உங்க தம்பிக்கு கேரக்டர் வைக்கக் கூடாது.

நம்பர் 2 – ஒரு ஹிட் கொடுத்துட்டு வரணும். இதே இரண்டு கண்டிஷன்களைத்தான் தளபதியும் சொல்லியிருக்கிறார். ஒரு ஹிட் கொடுத்துட்டு வர்றேன் என்று சபதம் எடுத்திருக்கிறார்!