News | செய்திகள்
தல, தளபதியுடன் நடித்தால் மட்டும்தான் பட வாய்ப்பு கிடைக்குமா? AngryBird ஆக மாறிய பிரபல நடிகை.!
சினிமா திரையுலகில் பொதுவாக எத்தனை வருடம் ஆனாலும் எவ்வளவு வயது ஆனாலும் எப்பொழுதும் நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க படுகிறது, முன்னணி நடிகரான அஜித், விஜய்யுடன் சேர்ந்து நடித்தால் மட்டும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைகின்றது என நடிகை ஆண்ட்ரியா மிக ஆவேசமாக பேசியுள்ளார்.

Andrea-Jeremiah
ஆம் சினிமா துறையில் இப்படிதான் நடக்கிறது, நடிகர்களுக்கு வயது அதிகமானாலும் அவர்களை மட்டும் ரசிகர்கள் ஏற்று கொள்கிறார்கள் ஆனால் அதுவே நடிகையாக இருந்தால் அவ்ளோதான் கொஞ்சம் அழகும் உடல் கட்டமைப்பும் குறைய தொடங்கினால் சினிமாவில் நடிகையாக இருக்க முடியாது அக்கா,அம்மா என சில கேரக்ட்டர் தான் கிடைக்கும் அதுவே நடிகர் எப்பொழுதும் நடிகர்தான்.

thala-ajith vijay
நடிகை ஆண்ட்ரியா ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதில் அவர் ஆதங்கத்தை கூறினார் அதில் கூறியதாவது, நான் தரமணி படத்தில் நடித்த பொது எனது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது ஆனால் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை இது மிகவும் வருத்தமாக உள்ளது.
மேலும் ஆவேசமாக விஜய் போன்ற முன்னணி நடிகருடன் நடித்தால் மட்டும் தான் பட வாய்ப்புகள் கிடைக்குமா? சினிமா துறையில் இங்கு திறமைக்கு எந்த மதிப்பும் இல்லையா? என ஆவேசமாக பேசினார் அதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
