ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பலரும் தங்களது படங்களில் ஆப்பிள் போனை பயன்படுத்தி உள்ளனர்.ஐபோன் 10 புதிய வகை மொபைல் போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. மின்சார ஓயர்கள் இல்லாமல் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதி, ஊடு சிவப்பு கேமிரா, முக அங்கீகாரத்தை வைத்து போனை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செல்போன் அறிமுகமான ஆப்பிள் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.tamil actors

அதிகம் படித்தவை:  உங்கள் பேவரிட் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் உண்மை பெயர்கள் தெரியுமா?

இந்நிலையில், எந்தெந்த படங்களில் நட்சத்திரங்கள் ஆப்பிள் போனை பயன் படுத்தி இருக்கிறார்கள் என்ற சுவாரஸ்ய தகவல் இது. விஜய் தலைவா படத்தில் அமலா பாலுடன் செல்ஃபி எடுக்கும் காட்சியில் ஐபோனை பயன்படுத்தி இருப்பார். சிம்பு இது நம்ம ஆளு படத்திலும், அஜித் என்னை அறிந்தால் படத்தின் காட்சிகளிலும் ஐபோனை பயன்படுத்தி இருப்பார்கள்.

அதிகம் படித்தவை:  விக்ரமின் சாமி 2 சியான் செய்த அதிரடி முடிவு.! குமுறும் கீர்த்தி சுரேஷ்.!

ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்திலும், அஞ்சான் படத்தில் சூர்யாவும் இந்த ப்ராண்ட் செல்போனை பயன்படுத்தி இருக்கின்றனர். விக்ரம் இருமுகன் படத்தில் ஒரு காட்சியிலும், அரவிந்த்சாமி தனி ஒருவன், சிவகார்த்திகேயன் மான் கராத்தே படங்களிலும் இந்த போனை உபயோகப்படுத்தி இருந்தனர்.

விஜய்சேதுபதி, சேதுபதியில் ஒரு பாடல் காட்சியிலும், ஜெய் -வடகறி படத்திலும் ஆப்பிள் போனை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.