நாட்டில் பல பிரச்சனைகள் நடந்து கொண்டு இருக்கிறது அதில் சினிமா பிரச்சனையும் ஓன்று, திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் தான் திரைப்படங்கள் திரையிடபடுகிறது, இதை திரையிடும் கியூப் நிறுவனம் அதிகமான கட்டணங்கள் வசூலித்து வருவதால் கடந்த மார்ச் 1 முதல் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள் அதனால் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.

vishal

அதனால் திரையில் ரசிகர்கள் கூட்டம் குறைய தொடங்கிவிட்டன சொல்ல போனால் ஈ ஓட்டும் அளவிற்கு வந்துவிட்டார்கள், புது படம் இல்லாததால் பழைய ஹிட் படத்தை திரையிட்டு வருகிறார்கள், அதனால் விஜய்,அஜித் ,என பல நடிகர்களின் பழைய படத்தை திரையிட்டு வருகிறார்கள், தற்பொழுது உள்ள கால கட்டத்தில் புது படங்களே ஒரு வாரம் தான் திரையில் ஓடும் பழைய படம் சொல்லவா வேணும் அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  அஜித் வாழ்க்கையில் காதல் தோல்வி! யார் அவர்கள் தெரியுமா

நிலைமை இப்படி இருக்க கியூப் நிறுவனத்திடம் தயாரிப்பாளர் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தியது ஆனால் சுமூகமாக முடிவு கிடைக்காததால் வருகிற 16ம் தேதி முதல் அனைத்து படபிடிப்பும் ரத்து செய்யப்படும் என விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் தல, தளபதி, சூர்யா என முன்னணி நடிகர்களின் படம் தள்ளி போகும் என எதிர்பார்க்கபடுகிறது இந்த நிலையில் விசுவாசம் படம் இன்னும் துவங்க கூட இல்லை அதற்குள் இப்படி ஒரு அறிவிப்பு வருவதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.