பல்வேறு தடைகளை கடந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த ரஜினி முருகன் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதையொட்டி ரஜினி முருகன் நாயகன் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அஜித், விஜய், தனுஷ் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அஜித் ஒரு உண்மையான பண்புள்ள மனிதர் என்னை உற்சாகப்படுத்திய அவரது வார்த்தைகளையும், அறிவுரையையும் என்னால் மறக்க முடியாது.

அதிகம் படித்தவை:  ட்விட்டரில் பிரபல இயக்குனரால் அசிங்கப்படுத்தப்பட்ட தமிழிசை..!

விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் விஜய் சார் கையால் விருது பெற்றது எனது வாழ்க்கையில் சிறந்த தருணங்களில் ஒன்று. என்னிடம் அவர் பேசிய வார்த்தைகள் எனக்கு உற்சாகம் அளிப்பதாக அமைந்தன. மறக்க முடியாத இந்த வாய்ப்பை உருவாக்கி தந்தவர்களுக்கு நன்றி.

நடிப்பில் தனுஷ் ஒரு திறமையான மனிதர். தற்போது ஹாலிவுட் செல்லும் அவர், அங்கும் அதை நிரூபிப்பார் என்றார். சிம்பு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் திறமையானவர் என்று கூறினார்.

அதிகம் படித்தவை:  2016ல் ரிலீஸ் ஆன படங்களில் முதல் நாள் வசூலில் இடம்பிடித்த டாப் 5 படங்கள்

உங்கள் செல்போனில் என்ன ரிங்டோன் வைத்திருக்கிறீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்ட போது, எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்ற நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஒடு ராஜா பாடலை ரிங்டோனாக வைத்திருக்கிறேன் என்றார்.

கெத்து தமிழ் வார்த்தை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்