Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல படமா? தளபதி படமா? சாய் பல்லவியின் அட்டகாசமான பதில்.!
தல படமா? தளபதி படமா? சாய் பல்லவியின் அட்டகாசமான பதில்.!
தமிழ் சினிமாவில் புதிதாக எந்த நடிகை வந்தாலும் அல்லது வளர்ந்த முன்னணி நடிகைகளாக இருந்தாலும் அவர்களிடம் மீடியாக்கள் கேட்கும் முதல் கேள்வி தல தளபதியுடன் எப்போது நடிப்பீர்கள் என்று தான்.
ஏனென்றால் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பது ரஜினி கமலுக்கு பிறகு விஜய் அஜித் தான், அதனால்தான் மீடியாக்கள் இந்த கேள்வியை எந்தப் புதிய நடிகை வந்தாலும் கேட்கிறார்கள், அந்த வகையில் நடிகை சாய் பல்லவியையும் விட்டுவைக்கவில்லை அதே கேள்விகளில் மாட்டினார்.
சாய்பல்லவி நடித்த மாரி 2 திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது, சமீபத்தில் நடந்த இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவியும் கலந்து கொண்டார்.
அவரிடம் வழக்கம்போல் தல தளபதி என்றால் யார் படத்தில் நடிப்பீர்கள் என ஒரு கேள்வியை எழுப்பினார்கள், அதற்க்கு சாய் பல்லவி யார் படத்தில் கதை நன்றாக இருக்கிறதோ அந்தப் படத்தில் தான் நடிப்பேன் என அட்டகாசமான பதிலை கூறியுள்ளார்.
