இன்று சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் விளம்பரம் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் சூப்பர்ஸ்டார்ர ஜினிகாந்தும் கமல் ஹாசனும் தன்னை நம்பி வருபவர்களுக்கு ஆடியோவை வெளியிடுவது டிரைலரை வெளியிடுவது என உதவி வருகிறார்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் விஜய்யும் அஜித்தும் அப்படியே நேரெதிர். இதில் விஜய் கூட சில முறை தனக்கு வேண்டப்பட்டவர்கள் என்றால் உதவி செய்வார். ஆனால் அஜித், தனது பட ப்ரொமோஷனுக்கே வருவதில்லை. இதனால் விஜய், அஜித் மீது திரையுலகினர் கடும் விரக்தியில் உள்ளார்கள்.