fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் நேரடியாக மோதும் அஜித்-விஜய்? ரசிகர்கள் அடங்குவார்களா?

மீண்டும் நேரடியாக மோதும் அஜித்-விஜய்? ரசிகர்கள் அடங்குவார்களா?

சமூக வலைத்தளங்களில் யார் ரசிகர்கள் மோதிக்கொள்கிறார்களோ இல்லையோ குண்டூசி சைஸ் பிரச்சனையாக இருந்தாலும் விடிய விடிய தூங்காமல் ட்விட்டரில் மோதிக்கொள்வது விஜய் – அஜித் ரசிகர்களுக்கு பழக்கமாகி விட்டது.

இரண்டு பேர் ரசிகர்களின் இந்த சமூக சண்டை பல மட்டங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும் மேற்படி ரசிகர்களைப் பெற்ற விஜய்யோ, அஜித்தோ இன்று வரை சண்டை போடாமல் அமைதியாக இருங்கள் என்று சொன்னதே இல்லை.

ஒரு வாரத்துக்கு முன்பு தான் அஜித்தின் 57-வது படம் பூஜை போடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்து விட்ட நிலையில் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரும் என்றும் உறுதியான தகவல் வெளியானது.

இப்போது அதே பொங்கலுக்குத்தான் விஜய் நடித்து வரும் விஜய் 60 படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்கிற தகவல் வெளியாகிருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாகவே தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் விஜய் – அஜித் படங்கள் நேருக்கு நேர் மோத ஆரம்பித்திருக்கின்றன.

இது இருவரது ரசிகர்களுக்கிடையே கொண்டாட்ட மனநிலையை உருவாக்கி விடுவதை விட யார் படம் பெருசு என்கிற விரோதத்தை தொடர்ந்து வளர்த்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்போது மீண்டும் விஜய் – அஜித் படங்கள் பொங்கல் தினத்தில் ஒரே நாளில் ரிலீசாவது மீண்டும் அவரது ரசிகர்களுக்குள் நீயா நானா என்கிற போட்டி மனப்பான்மையை வளர்க்குமோ என்கிற சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்கிறது.

சம்பந்தப்பட்டவங்க யோசிச்சா ரசிகர்களுக்கு நல்லது!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top