Tamil Cinema News | சினிமா செய்திகள்
வசூலில் விஜய் அஜித் படங்களை ஓரம்கட்டிய வேலைக்காரன்! மாஸ் தகவல்.!

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உலகெங்கும் வெளிவந்த படம் வேலைக்காரன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மேலும் ரோபோ ஷங்கர், பாலாஜி, சினேகா ஆகியோர் நடித்துள்ளார்கள். வேலைக்காரன் படத்தை தனி ஒருவன் படத்தின் இயக்குனர் மோகன் ராஜா இயக்கியுள்ளார்.
இந்த படம் சமூக பிரச்னையை பேசும் படமாக எடுத்துள்ளார் மோகன் ராஜா இந்த படம் வெளிவந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது அதுமட்டும் இல்லாமல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.இதில் நடித்துள்ள பகத் பாசிலின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.
வேலைக்காரன் படம் சிவகார்த்திகேயன் திரைபயனத்தில் திருப்பு முனையாக அமைந்துள்ளது. இந்த நிலையில் நல்ல வசூல் சேர்த்து வருகிறது தற்பொழுது விஜய் படமான பைரவா ,அஜித் படமான வேதாளம் ஆகிய படங்களின் வசூலை ஓரம்கட்டியுள்ளது.
ஆம் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் சென்னையில் பைரவா ,வேதாளம் படத்தின் வசூலை முறியடித்துள்ளது பைரவா படம் 7 கோடியும் ,அஜித்தின் வேதாளம் படம் 6.9 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்தது ஆனால் தற்பொழுது அந்த சாதனையை சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் முறியடித்துள்ளது.
இது சிவகார்த்திகேயனுக்கு மற்றும் அவரின் ரசிகர்களுக்கு சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
