Tamil Cinema News | சினிமா செய்திகள்
90-க்களில் அஜித்,விஜய் படத்திற்கே டஃப் கொடுத்த நடிகரின் சினிமா வாழ்க்கை திசை மாறி, இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா
நடிகர் பிரசாந்த் தொண்ணூறுகளில் கொடிகட்டி பறந்த ஒரு ஹீரோ இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்,விஜய் அஜித்திற்கே டப் கொடுக்கும் ஹீரோ என்றால் அப்பொழுது பிரசாந்த் தான், இவரின் படம் வெளிவருகிறது என்றால் ரசிகர்கள் இவர் படத்திற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.
அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தது ஆனால் தற்பொழுது இவரின் மார்க்கெட் பாதாளத்திற்கு சென்றுள்ளது, ரொம்ப வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஜானி என்ற படத்தில் நடித்துள்ளார் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் பிரசாந்த் நீண்ட வருடங்களாக சினிமாவில் தலைகாட்டாமல் அதற்கு காரணம் இவரின் திருமண பிரச்சனைதான் ஐந்து வருடங்களாக நீதிமன்றத்திற்கு அலைந்து சினிமாவில் இருந்து முற்றிலும் விலகினார்.ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் பிரஷாந்த் மிகவும் கஷ்டப்பட்டதாக அவருடைய தந்தை தியாகராஜனே கூறியுள்ளார்.
