Connect with us
boomerang-movie

SIIMA விருது வழங்கும் விழாவில் அஜித்-விஜய்

SIIMA விருது வழங்கும் விழாவில் அஜித்-விஜய்

SIIMA விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த விழாவுக்கு அஜித்தும் விஜய்யும் கலந்து கொள்ளாவிட்டாலும் அவர்களுடைய பாடல் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விழாவில் ‘மோஸ்ட் ஸ்ட்ரீம்ட்’ பாடலுக்கான விருது ‘புலி படத்தில் இடம்பெற்ற ‘ஏண்டி ஏண்டி’ என்ற பாடல் கிடைத்துள்ளது. இந்த விருதை பெற வந்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இந்த விருது பெற காரணமாக இருந்த இளையதளபதி விஜய் மற்றும் ஸ்ருதிஹாசனுக்கு நன்றி தெரிவித்தார். விஜய்யின் பெயரை அவர் சொன்னதும் அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது

தேவிஸ்ரீ பிரசாத் இந்த விருதை பெற்றதை அடுத்து அனிருத் மேடைக்கு வந்து ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா’ பாடலை அட்டகாசமாக பாடினார். விஜய் பெயர் சொன்னதும் அரங்கம் எப்படி கைதட்டலில் அதிர்ந்ததோ அதேபோல் மீண்டும் ஒருமுறை அரங்கம் அதிர்ந்தது என்பதை சொல்ல வேண்டுமா? எப்படியோ அஜித்தும் விஜய்யும் இந்த விழாவுக்கு வரவில்லை என்றாலும் அவர்களது பெயரால் இந்த அரங்கம் அதிர்ந்தது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top