அஜித், விஜய், மாதவன், விஜய் சேதுபதி என நால்வரையும் இணைத்து மேஷ் அப் ஸ்டைலில் எடிட் செய்து ‘விக்ரம் வேதா 2’ என டைட்டில் வைத்துள்ள வீடியோ ஒன்று யூ டியூபை கலக்கிவருகிறது.

வய் நாட் ஸ்டுடியோஸ், சசிகாந்த் தயாரிப்பில், புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில்; மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து 100 நாட்களை கடந்து மாஸ் ஹிட் படம் விக்ரம் வேதா. ஜிஎஸ்டி பிரச்சனையால் தியேட்டர்கள் ஸதம்பித்து போய் இருந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்தது இப்படம். நம் ‘வேதாளம் சொல்லும் கதை’ பாணியில் எடுக்கப்பட்ட து இப்படம். இப்படத்தின் ரீ-மேக் உரிமையை பெற, இப்பொழுது உள்ள சூழலில் போட்டோ போட்டி நடக்கிறது நாம் அறிந்த விஷயமே.

அதிகம் படித்தவை:  இரும்புத்திரை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம் !

இணையத்தில் பலரும் பல விஷயங்களை அலசி வருவார்கள் . அதில் ஒன்று இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா அல்லது வராதா என்பது. அடுத்து தல தளபதி ரெண்டு பெரும் சேர்ந்து நடித்தார்கள் என்றால் படம் எப்புடி இருக்கும் என்பது. இது இரண்டையும் இணைத்து அசத்திவிட்டார் எடிட்டிங் தெரிந்த வித்தகர் ஒருவர்.

அதிகம் படித்தவை:  வக்கிர புத்தியுடன் தினமும் எனக்கு மெஸேஜ், மெயில் அனுப்புகிறார்கள். இதுவா நம் கலாச்சாரம் ? போட்டோ ஆதாரத்துடன் சின்மயியின் புதிய பதிவு.

‘விக்ரம் வேதா’ படத்தின் இறுதி காட்சியில் ‘என்னை அறிந்தால்’ அஜித்தையும் , ‘தெறி’ விஜயையும் சேர்த்து வைத்து சூப்பராக உருவாக்கி இருக்கிறார் கோகுல் வெங்கட் என்பவர்.

இந்த வீடியோ வெளியான இரண்டு நாட்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இவரின் எடிட்டிங் திறமை கை தேர்ந்த எடிட்டர் அளவில் உள்ளது என்பது தான் உண்மை.