இளையதளபதி விஜய் இளம் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். இயக்குநரோ இரட்டை இலக்க கோடிகளில் சம்பளம் கேட்க தம்பிக்கு இது ஓவரு என்று விஜயிடம் முறையிட்டனர் தயாரிப்பாளர்கள். அவரோ அதெல்லாம் நீங்கதான் பேசிக்கணும் என்று சொல்லி கட் செய்து விட்டார். இப்போது இதே நிலைமையில் இருக்கிறார் அஜித் பட தயாரிப்பாளர்.

தல அஜித் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் விவேகம் படத்தின் படப்பிடிப்பு செலவு அநியாயத்துக்கு எகிறி விட்டதாம். இதை அஜித்திடம் லேசாக சொல்ல முயற்சித்திருக்கிறது தயாரிப்பு தரப்பு. ‘இது உங்களுக்கும் இயக்குநருக்குமான பிரச்னை. என்னை இழுக்காதீங்க’ என்று சொல்லி விட்டதாம் தல. முக்கிய ஹீரோக்கள் இருவருமே இப்படி சொன்னதால் தயாரிப்பாளர்கள்தான் காண்டில் இருக்கிறார்கள்.