‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் இணைந்திருக்கும் படம் ‘விவேகம்’. இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.ajith vivegam

‘சர்வைவா’, ‘தலை விடுதலை’ போன்ற பாடல்கள், சாவன் மற்றும் யூடியூப் தளங்களில் அதிக வியூஸ் பெற்ற பாடல்களாகியிருக்கின்றன.விவேகம் படம் பல கலவையான விமர்ச்சனங்களை தாண்டி திரையில் நல்ல வசூல் செத்தது அனைவரும் அறிந்ததே.

பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கி வரும் இப்படத்தில் விஜய் முதன்முறையாக 3 வேடங்களில் நடித்துள்ளார். தளபதிக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று நாயகிகளாம். விஜய்-க்கு எதிராக மோதும் ஸ்டைலிஷான வில்லன் வேடத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளாராம்.

மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனராம். ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அட்லியின் பர்த்டே ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டது.டீசர் வெளிவந்து 5 மணி நேரத்தில் உலக சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே மேலும் பல சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கபடுகிறது.

தமிழ் சினிமாவில் எப்போதும் மாறி மாறி போட்டி போட்டு கொண்டு சாதனை படிப்பவர்கள் தலையும் தளபதியும்,இவர்களின் படம் வந்தால் திரையரங்கில் கூட்டம் அலை மோதும் விசில் பறக்கும் அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

ஆனால் இருவருமே உண்மையில் நல்ல நண்பர்கள்,இவர்கள் இருவருமே நல்ல பண்பு உடையவர்கள் மற்றவர்களுக்கு உதவும் தன்மை உள்ளவர்கள்  ஆனால் இது இவர்களது ரசிகர்களுக்கு எப்போதுமே புரிவதில்லை.

இந்நிலையில் தற்போது மலையாள சினிமாவின் மெகா ஹிட் ஸ்டாரான துல்கர் சல்மான் அஜித், விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, அஜித் விஜய் இருவருமே நல்ல நண்பர்கள், இதுவரை இவர்களுக்கு இடையே பிரச்சனை எதுவும் வந்ததாக எனக்கு தெரியவில்லை.

கிரிக்கெட் மேட்சில் சிலருக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸை பிடிக்கும், சிலருக்கு வேறொரு அணியை பிடிக்கும், இதையெல்லாம் தவறாக எடுத்து கொள்ள முடியாது அல்லவா? நடிகர்களையும் அதேபோல் பாருங்கள் என கூறியுள்ளார். இருவருக்கும் கேரளாவில் நல்ல மதிப்பும் ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

தல தளபதி ரெண்டுபேருக்கும் கேரளா மட்டும் இல்லை உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் உள்ளார்கள்