fbpx
Connect with us

Cinemapettai

ப்ளூ சட்டைக்கு எதிராக அஜித் விஜய் ரசிகர்களின் புதிய அதிரடி!

Ajith-Vijay

News | செய்திகள்

ப்ளூ சட்டைக்கு எதிராக அஜித் விஜய் ரசிகர்களின் புதிய அதிரடி!

தீபாவளியன்று வெளியான மெர்சல் படத்தின் பிவர் இன்றுவரை குறையவில்லை. இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், முதன் முறையாக மூன்று கெட்டப்களில் விஜய், அட்லீயின் இயக்கம், A.R. ரகுமான் இசை என்று படத்திற்கான எதிர்பார்ப்பு பல மாதங்களாக ரசிகர்களிடம் இருந்துவந்தது.

படம் வெளிவந்த பிறகு பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாகவும், பல சமூக பிரச்சனைகளை தைரியமாக எடுத்துக் கூறும் படமாகவும் மெர்சல் சாதித்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இணையத்தில் மெர்சலுக்கான விமர்சனங்கள் முன்னுக்கு பின் முரணாகவே ஒவ்வொரு விமர்சகர்களாலும் சொல்லப்பட்டு வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் மெர்சல் படத்தை பற்றி மிகவும் வன்மையாக கேவலப்படுத்தும் விதமாய் தனது வழக்கமான நடையில் விமர்சித்துள்ளார்.
அவரது விமர்சன வீடியோ உங்கள் பார்வைக்கு

பொதுவாக இது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் விஜய் படம் பற்றி இருந்தால் அஜித் ரசிகர்கள் அதை ஆதரிப்பார்கள், அஜித் பற்றி இருந்தால் விஜய் ரசிகர்கள் அதை ஆதரிப்பார்கள். ஆனால் ப்ளூ சட்டைக்காரரின் விமர்சனம் இதற்கு முன் விவேகம் படம் பற்றி மோசமாக வந்தபோது அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய் ரசிகர்களும் அதனை எதிர்த்தனர்.

தற்போதும் இதுபோல் மெர்சல் படத்திற்கான மோசமான விமர்சனத்தை அஜித் ரசிகர்களும் இணைந்து எதிர்கின்றனர். இணையத்தில் இவரை எதிர்த்து பல ட்ரோல்கள் வந்த வண்ணம் உள்ளன.

அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு.

சினிமா விமர்சனம் மட்டுமல்லாது அஜித் செய்துவரும் பல நல்ல செயல்களை கூட கிண்டல் அடித்து வருகிறார் ப்ளூ சட்டை. சமீபத்தில் வெளியான ஒரு பதிவில் அஜித் ரசிகர்கள் தினமும் செய்திதாளை படித்துவிட்டு அதில் வரும் விபத்துக்களையும், இயற்கை சீரழிவு செய்திகளையும் குறித்து வைத்துக்கொள்வர், அதை வைத்து அஜித் அந்த விபத்துக்கு அவ்வளவு பணம் நன்கொடையாக கொடுத்தார், தனது டிரைவர் குடும்பத்திற்கு இவ்வளவு பணம் அன்பளிப்பாக கொடுத்தார் என்றெல்லாம் கதை கதையாய் விடுவார்கள். அவர்கள் சொன்ன பண மதிப்பை கூட்டி பார்த்தால் இந்தியாவின் கடனையே அடைத்துவிடலாம் என்றெல்லாம் பேசியுள்ளார்.

ajith vijay vishal plan

Ajith Vijay

இப்படி ஒட்டுமொத்த அஜித் விஜய் ரசிகர்களின் கோவத்தையும் சம்பாதித்துக் கொண்ட ப்ளூ சட்டைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இனி வரும் அஜித் விஜய் படங்களின் முதல் நாள் முதல் இரு வாரங்களுக்கு ப்ளூ சட்டையை எந்த திரையரங்கிலும் நுழையாதபடி தடுக்க வேண்டும், ஒவ்வொரு திரையரங்கிற்கும் ஒரு ரசிகர் குழு இதை கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனராம்.

கொசுறு: மெர்சல் படத்தின் விமர்சனம் குறித்து கமல் ட்விட்டரில் பகிர்ந்த பதிவு

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top